நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 18 அமர்வுகள் என வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகஸ்ட் 27ஆம் தேதி நாடாளுமன்ற செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ளவும், அதை அலுவலர்களும் உறுப்பினர்களும் முறையே பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.