இந்தியாவின் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் அகர்வால் தலைமையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியாவில் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டன.
கரோனா பாதிப்பு மற்றும் அதன் தாக்கத்தைக் கொண்டு சிவப்பு, பச்சை, வெள்ளை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டகளையும் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, நோய் தொற்று தீவிரமாக உள்ள 170 மாவட்டங்கள் சிவப்பு மாவட்டங்களாவும், குறைவான தாக்கம் உள்ள 207 மாவட்டங்கள் வெள்ளை மாவட்டங்களாகவும், வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படாத 353 மாவட்டங்கள் பச்சை மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.