உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் ஆங்காங்கே பரவியுள்ளது. சீனாவின் வூஹான் பகுதியில் தொடங்கி அந்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்குள்ளாக்கியது. அந்நாட்டில் வசித்த 645 இந்தியர்கள் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க ஏர் இந்தியாவின் பிரத்யேக விமானம் மூலம் கடந்த ஒன்றாம் தேதி இந்தியா கொண்டுவரப்பட்டனர்.
இவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்களிடம் நோய் பாதிப்பு சோதனையை மத்திய சுகாதாரத் துறை மேற்கொண்டது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்தியா அழைத்துவரப்பட்ட 645 இந்தியர்கள் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.