அஜித் பவார்மகாராஷ்டிராவின் நீர்வளத் துறை அமைச்சராக 1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இந்தத் துறை சார்பாக விடப்பட்ட ஒப்பந்தந்தங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 12 திட்டங்களில் நடந்த ஊழலுக்கும் அஜித் பவாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அதுல் ஜக்தப் என்பவர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
வழக்கின் விசாரணை வேகமாக நடைபெறவில்லை எனக் கூறிய அதுல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார். 102 ஒப்பந்தப் புள்ளிகளின் மீது நாக்பூர் சிறப்புப் புலனாய்வு குழுவும் 57 ஒப்பந்தப்புள்ளிகளின் மீது அமராவதி சிறப்புப் புலனாய்வு குழுவும் விசாரணை செய்தது.