தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பயணிகள் தாமதத்திற்கு விமானங்களைக் குறை கூற முடியாது’ - உச்ச நீதிமன்றம் - இண்டிகோ வழக்கு உச்ச நீதிமன்றம்

டெல்லி: விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக பயணிகள் சரியான நேரத்தில் வரத் தவறியதற்காக, விமானங்களை குறை கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

airlines
airlines

By

Published : Jan 29, 2020, 10:11 AM IST

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பயணிகள் முறையான போர்டிங் பாஸ் வைத்திருந்தும் அவர்களுக்கு முறையான அறிவிப்பு தெரிவிக்காமல் விமானம் புறப்பட்டதால் பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்றும், இதற்கு அபராதமாக மூன்று லட்சத்து 77 ஆயிரத்து 770 ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என தேசிய நுகர்வோர் நிவாரண ஆணையம் ( NCDRC) 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஏர்லைன்ஸ் இண்டிகோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்பளித்த நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அடங்கிய அமர்வு, “விமான நிலையத்தில் விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக சரியான நேரத்திற்கு பயணிகள் வராவிட்டால், பயணிகளுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் விமான நிறுவனங்களுக்கு இல்லை.

indigo airlines

குறைந்தபட்சம் 25 நிமிடத்திற்கு முன்னதாக வர வேண்டியது பயணிகளின் கடமையாகும். இந்த விவகாரத்தில இண்டிகோவின் தவறு ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க பயணிகளின் பொறுப்பு” என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: 'விமானம் தாமதமானால் இனி கவலையே வேண்டாம்: விரைவில் வருகிறது தியேட்டர்'

ABOUT THE AUTHOR

...view details