தமிழ்நாடு

tamil nadu

வான்வழியாக கரோனா பரவுவதாக எங்கேயும் பதிவாகவில்லை!

By

Published : Mar 24, 2020, 8:36 AM IST

கரோனா வைரஸ் வான்வழியாக பரவி வருவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் வந்த நிலையில், வான்வழியாக கரோனா வைரஸ் பரவியதாக இதுவரை எங்கேயும் பதிவாகவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார்.

airborne-spread-of-covid-19-not-reported-so-far-who-official
airborne-spread-of-covid-19-not-reported-so-far-who-official

உலகம் மூழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனிடையே கரோனா வைரஸ் வான்வழியாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் பூனம் சிங் விளக்கமளித்துள்ளார்.

அதில், ''வான்வழியாக கரோனா வைரஸ் பரவியதாக இதுவரை எங்கேயும் பதிவாகவில்லை. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இருமலாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடம் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மட்டுமே வைரஸ் பரவியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவது பற்றி கண்டறிய பல தொற்று நோய் பகுப்பாய்வுகளின் தரவுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா; எண்ணிக்கை 12ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details