தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏர் இந்தியா மோசமான நிதி சுமையைச் சந்தித்துவருகிறது - ஹர்தீப் பூரி - சம்பளமில்லா விடுப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனம் மோசமான நிதிச்சுமையைச் சந்தித்துவருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளது.

Air India
Air India

By

Published : Oct 15, 2020, 11:53 AM IST

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்தும், அந்நிறுவனப் பணியாளர்கள் சந்தித்துவரும் இடர்பாடுகள் குறித்தும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரிடம் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள ஹர்தீப் பூரி, "தற்போதைய சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் மிக சவாலான நிதிச் சுமையைச் சந்தித்துவருகிறது. இருப்பினும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து முயற்சிகளையும் நடத்திவருகிறது. கோவிட்-19 பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன.

இதையடுத்து, நிறுவன ஊழியர்களின் நலன் கருதியே சம்பளமில்லா விடுப்பு (leave without pay) என்ற திட்டத்தை ஏர் இந்தியா முன்னெடுத்தது. இதன்மூலம் நிறுவனத்தின் ஒப்புதலுடன் ஊழியர்கள் குறிப்பிட்ட காலம் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்தக் காலத்தில் அவர்கள் தேவையான மாற்று வேலைகளைச் செய்துகொள்ளலாம். இதன்மூலம் ஊழியர்களும் தேவைக்கேற்ப பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை நிறுவனத்தின் சம்பள செலவும் குறைக்கப்பட்டுள்ளது.

இது இரு தரப்புக்கும் வெற்றிகரமான பலன்களைத் தந்துள்ளது. மேலும், இந்த கோவிட்-19 காலகட்டத்தில் சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் நிதிச்சுமையைக் குறைக்க பல்வேறு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இருப்பினும் ஏர் இந்தியா ஒரு ஊழியரைக் கூட பணிநீக்கம் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பிக் பில்லியன் டே விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி சலுகைகள்!

ABOUT THE AUTHOR

...view details