தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய விமானப்படை தினம்: போர் விமானங்கள் ஒத்திகை பயிற்சி! - Suryakiran aerobatic team

டெல்லி: 88ஆவது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு தேஜஸ், ஃப்ளை பாஸ்ட் உள்ளிட்ட விமானப்படை விமானங்களில் வீரர்கள் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய விமானப்படை தினம்
இந்திய விமானப்படை தினம்

By

Published : Oct 6, 2020, 4:02 PM IST

88ஆவது இந்திய விமானப்படை தினம் வரும் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்நாளில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் விமான சாசகங்கள் நடைபெறும். அதனால் தற்போது அதற்கான பயிற்சியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விமானப்படை அலுவலர் ஒருவர், "இந்தப் பயிற்சியில் தேஜஸ் எல்.சி.ஏ, ஃப்ளை பாஸ்ட், மிக்-29, மிக்-21, சுகோய் -30 உள்ளிட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

போர் விமானங்கள் ஒத்திகை பயிற்சி

மேலும் மி 17 வி 5 ஏ.எல்.எச் மார்க்-4, சினூக், மி-35, அப்பாச்சி போர் விமானங்களும் இதில் பங்குபெற்றன. புதிதாக விமானப்படையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படை தினத்தன்று சாகசம் நிகழ்த்த உள்ளது" என தெரிவித்தார்.

1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப் படை நிறுவப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விமானப்படையில் இணைந்த ரஃபேல் போர் விமானங்கள்!

ABOUT THE AUTHOR

...view details