ஹைதராபாத் (தெலங்கானா): ஏர்ஏசியா விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவசரமாக தரையிறங்கிய ஏர்ஏசியா விமானம்!
ஏர்ஏசியா விமானம் அவசரமாக தரயிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் 70 பயணிகள் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
AirAsia
இந்த விமானமானது, ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் அனுமதியைப் பெற்று தரையிறக்கப்பட்டது.
இதில் 70 பயணிகள் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தின் எரிபொருள் சம்பந்தப்பட்ட எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் தான் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.