ராஜஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு தீர்வளிக்கும் விதமாக அதிருப்தி தலைவரான சச்சின் பைலட்டின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இது தொடர்பாக கூறுகையில், 'சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எடுத்துள்ள நிலையில், விரைவில் இதற்குத் தீர்வு எட்டப்படும்' என்றார்.