புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கலைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள், அலுவலர்கள் நடத்திவரும் போராட்டத்தால் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
இதனைக் கண்டித்தும், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தைப் பூட்டி போராட்டம் நடத்தினர்.