தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்று 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும் (டிஆர்எஸ்), பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹைதராபாத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.23) மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அசாதுதீன் ஓவைசி, "ஹைதராபாத் வாக்காளர் பட்டியலில் 30ஆயிரம் முதல் 40ஆயிரம் பேர் வரை ரோஹிங்கியாக்கள் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். வாக்காளர் பட்டியலில் 30,000 ரோஹிங்கியாக்கள் இருந்தால், உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்கிறார்? அவர் தூங்குகிறாரா?