வைரஸ் என்ற பெயரை விட, கோவிட்-19 என்ற பெயர் உலகின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றுள்ளது. பொருளாதாரங்கள் வீழ்ச்சியடையும் அதே நேரம், பீதி நம் வீதிகள் மற்றும் ஊடகங்கள் வழியாக நம்மை ஆட்சி செய்கிறது. கரோனா வைரஸால் தற்போது தும்மல் மற்றும் இருமல் ஆகியவை ஒரு குற்ற செயலாகிவிட்டது.
மற்ற நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பைப் போல இந்திய அரசாங்கமும் இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்கிறது. ஆனால் அச்சுறுத்தல் நம்மைச் சூழ்ந்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்த சீனா போன்ற நாடே இந்த நோய்க்கு இரையாகிவிட்டது, ஈரான் இதனால் அழிக்கப்பட்டு வருகிறது, மேலும் கோவிட் -19 சார்க் நாடுகளையும் இந்தியாவையும் இன்னும் சில நாட்களில் அதன் முழு வலிமையுடன் தாக்கும் என எதிர்பார்க்கலாம் .
அதற்கு முன்பாகவே, கறுப்புச் சந்தைகள் ஏற்கனவே முகமூடிகள், சோப்புகள், கிருமி நாசினி போன்ற பல புதிய பொருட்களை விற்பனை செய்கின்றன. இந்த வைரஸால் நமக்கு ஏற்பட்ட வெளிப்படையான பாதிப்பில் உலகம் இருக்கும்போது மக்கள் பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள். கோவிட்-19 பயம் இந்தியாவையும் உலகையும் பற்றியுள்ளது. அந்த பயம், இன்று கரோனா வைரஸை விட உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தருகிறது. மிக விரைவில் கறுப்புச் சந்தைகள் அத்தியாவசிய மருந்துகள், உணவுகள் போன்றவற்றை பதுக்கி வைக்கும்.
மேலும் நம்பிக்கையற்ற நிலை மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விவசாயத் துறை மற்றும் விதைகள் கரோனா பிரச்சினையால் பாதிக்கப்படும். நமது வாழ்வின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மையின் பெரும்பகுதி தரமான விதைகளையும் உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட விதைத் துறையையும் சார்ந்துள்ளது. நமது உணவு உற்பத்தி என்பது மனித வளங்கள், பண்ணை உழைப்பு மற்றும் விவசாய பொருட்களான விதைகள், உரங்கள் போன்றவை சுலபமாக கிடைக்கும் வகையில் அமையப் பெற்றது. இவை இரண்டும் இந்த நேரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லையை மூடியுள்ளது, இப்போது உலக நாடுகள் விசாக்களை ரத்து செய்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது. தமது நாடுகளுக்குள் கூட, மக்கள் வெளியே வர பயப்படுகிறார்கள், குறிப்பாக நெரிசலான இடங்களைத் தவிர்க்கிறார்கள்.
வியட்நாம் முதல் இத்தாலி வரை பள்ளிகள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தற்போதைய சூழல் விவசாயத்தின் மூலம் கிடைப்பவற்றை குறைக்கிறது. இந்த பருவத்தில் விவசாய கூலி உயர்வு இருக்கும், மேலும் உணவு உற்பத்தி செலவு அதிகரிப்பதை நாம் காணலாம்.கோழிப்பண்ணையில் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாக உள்ளது, ஏனெனில் டெல்லியில் கோழியின் விலையும் சரிந்துள்ளது. பயத்தின் காரணமாக பண்ணை தொழிலாளர்கள் கோழி பண்ணைகளில் வேலை செய்ய அதிக தயக்கம் காட்டுவார்கள்,
உலகளாவிய விதைத்துறை உலகளாவிய உற்பத்தி பிராந்தியங்களின் விநியோகச் சங்கிலியை வெகுவாக சார்ந்துள்ளது. மேலும் எந்த நாடும் விதை உற்பத்தியில் தன்னிறைவோடு இல்லை. துறைமுகங்களை மூடுவது, விதை ஏற்றுமதிகளை முடக்குவது போன்றவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் விவசாய உற்பத்தித்திறனைக் குறைக்கும்.