ஜம்மு-காஷ்மீரின் காவல் துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நவீத் பாபு, வழக்குரைஞர் இர்பான் மிர் ஆகியோர் தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். பயங்கரவாத அமைப்புடன் தவீந்தர் சிங்குக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததல் அவருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு காவலர்கள் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிந்தனர். இதனால், அவர் பிணை கிடைத்தும் வெளியே வரமுடியவில்லை.