தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சங்கு ஊதி மண்ணில் புரளுங்கள்; கரோனா வராது!' - மக்களை குழப்பும் பாஜக தலைவர்கள் - கரோனா மருந்து

கரோனா நோய்க் கிருமியை அழிக்க உலக நாடுகளே தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் இருக்கும் வேளையில், அதனை விரட்ட பல வழிகளைக் கூறி, பாஜக தலைவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். அந்த வரிசையில் மக்களவை உறுப்பினரான சுக்பீர் சிங் சில மருத்துவக் குறிப்புகளை கூறி , மக்களை கலங்கடித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் சுக்பீர் சிங்
மக்களவை உறுப்பினர் சுக்பீர் சிங்

By

Published : Aug 17, 2020, 1:53 PM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்):மக்களவை உறுப்பினரான சுக்பீர் சிங் களிமண்ணில் புரண்டு, சங்கை எடுத்து ஊதினால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும் என மக்களுக்குக் கரோனா மருத்துவக் குறிப்பை வழங்கியுள்ளார்.

கரோனா நோய்க் கிருமியை அழிக்க உலக நாடுகளே தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் இருக்கும் வேளையில், அதனை விரட்ட பல வழிகளைக் கூறி, பாஜக தலைவர்கள்க் மக்களை குழப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர், பாஜக மக்களவை உறுப்பினரான சுக்பீர் சிங்.

தொடரும் அவலம்: உ.பி.-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!

உடல் முழுவதும் களிமண் பூசிக் கொள்ள வேண்டும், சங்கு ஊத வேண்டும் என்பதுதான் இவர் கொடுக்கும் கரோனா எதிர்ப்பு மருத்துவக் குறிப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் மக்களவை உறுப்பினரான இவர் இதற்கு முன்பு ஜூன் மாதம் பேட்டியளித்திருந்த போது, களிமண்ணில் அமர்ந்தவாறு யோகா செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவ்வாறு சுக்பீர் சிங் கூறியிருந்தார்.

இவரைத் தொடர்ந்து, கரோனாவை விரட்ட வேண்டுமானால், அப்பளம் சாப்பிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ரம்பால் மேக்வால் தெரிவித்திருந்தார். முன்னதாக ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ், கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. 'பாபி ஜி' அப்பளம் எனும் பெயரில் அது வந்துள்ளது. அதை 'வாங்கி சாப்பிடுங்கள்' என்று கூறியிருந்தார், அர்ஜூன் ரம்பால். பின்னர் அவருக்கே கரோனா வந்து ஆட்டிப்படைத்தது ஒரு சோகக் கதை.

பாஜகவில் இணைந்த ஷாஹீன் பாக் போராட்டக்காரர் ஷாஷாத் அலி!

இதேபோல் பசு கோமியம், சாணம் மூலம் கரோனாவை விரட்ட முடியும் என்று அஸ்ஸாம் சட்டப்பேரவை உறுப்பினர் சுமன் ஹரிபிரியா தெரிவித்திருந்தார். குஜராத்தில் இருக்கும் சில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுகின்றன எனவும்; கரோனா நோயாளிகள் பசுவிற்கு அருகில் அமர வைக்கப்பட்டு மாட்டுச் சாணம், மாட்டு கோமியம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது என்றும் சுமன் ஹரிபிரியா பேசியிருந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது.

மக்களவை உறுப்பினரான சுக்பீர் சிங் வெளிட்ட காணொலி

ABOUT THE AUTHOR

...view details