தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓரிரு நாளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு! - பாஜக தலைவர் தமிழ்நாடு

டெல்லி: புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

BJP TN leader announcement
BJP TN leader announcement

By

Published : Feb 16, 2020, 11:21 PM IST

Updated : Feb 17, 2020, 10:21 AM IST

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், ஐந்து மாதங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சனிக்கிழமையன்று மத்திய பிரதேசம், சீக்கிம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலைவர்கள் அறிவிக்கப்பட்டபோதும், தமிழ்நாடு பாஜக தலைமை குறித்த அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.

"2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ளதால், தமிழ்நாடு பாஜகவுக்கு தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க கூட்டம் நடைபெற்றது. இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கான தலைவர் அறிவிக்கப்படுவார்.

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நயினார் நகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம், மாநிலச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புதிய தலைவருக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் நயினார் நகேந்திரனும் கருப்பு முருகானந்தமும் தலைவர்களாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று பாஜகவின் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் அறிவிப்பு குறித்து பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி கூறுகையில், "கட்சியில் தற்போது எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைவர் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். ஏன் நாளைகூட தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம்" என்றார்.

இதையும் படிங்க:'நமஸ்தே ட்ரம்ப்'- ட்ரம்பை வரவேற்கத் தயாராகும் இந்தியா!

Last Updated : Feb 17, 2020, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details