நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சில மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைக்கு எதிராக ‘கருப்பு தினத்தை’ கடைபிடித்து அடையாளப் போராட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் முன்னெடுக்க இருந்தனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐ.எம்.ஏ) பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காணொலி வாயிலாக டெல்லியில் இன்று கலந்தாய்வு நடத்தினார். இதில் அமித் ஷா பேசியபோது, நெருக்கடியான இந்த நேரத்தில் மருத்துவர்கள் அடையாள எதிர்ப்பு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததால், அச்சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், சுகாதாரச் செயலாளர் ப்ரீத்தி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.