தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரெஞ்சு கல்வி குறித்து ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பிரெஞ்சு கல்வி ஒப்பந்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி, பிரென்ச் கல்வி குறித்து ஆலோசனை கூட்டம்

By

Published : Jun 28, 2019, 5:25 PM IST

புதுச்சேரி, தனியார் ஹோட்டலில் இந்தியா-பிரெஞ்சு கல்விப் பரிமாற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, புதுச்சேரி- சென்னை பிரான்ஸ் தூதுவர் கேத்தரின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி, பிரென்ச் கல்வி குறித்து ஆலோசனை கூட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, " 2018ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிபிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து கல்வி சம்பந்தமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில், புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு, பட்டயப் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் பிரான்ஸ் நாட்டில் அங்கீகரிப்பது, அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சி படிப்புகள், அனைத்து விதமான படிப்புகளுக்கும் புதுச்சேரியில் சான்றிதழ்கள்அங்கீகரிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கையெழுத்தானது என்றார்.

மேலும் அவர், புதுச்சேரியின் கல்வித்தரம் 9 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details