இது குறித்து அவர்கூறுகையில், "கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனையில் அவ்வாறு பாதகமான நிகழ்வு எதுவும் ஏற்பட்டால், அதைப்பற்றி அறிக்கை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும்.
கோவிட்-19க்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி விசாரணையில் பங்கேற்ற சென்னை தன்னார்வலர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ராஜேஷ் பூஷண், "பாதகமான நிகழ்வு எந்த வகையிலும் காலவரிசையைப் பாதிக்காது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு உள்ளது என்பதையும் நான் சுட்டுக்காட்ட விழைகிறேன். எனவே வழக்கின் குறிப்பிட்ட விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று பதில் அளித்தார்.
மருத்துவச் சோதனை தொடங்கும் போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள், முன்பே அறிவிக்கப்பட்ட ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் பூஷண் குறிப்பிட்டார்.
மேலும், "இது ஒரு உலகளாவிய நடைமுறை. இது எல்லா நாடுகளிலும் நடக்கிறது. ஒருவர் சோதனையில் பங்கேற்க முடிவுசெய்தால் ஏற்படக்கூடிய பாதகம் பற்றி அந்தப் படிவம் விவரமாக விவரிக்கிறது.