தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு - navaneetha krishnan

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

Nav

By

Published : Aug 5, 2019, 1:23 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூடிய அரசாணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக சார்பில் மாநிலங்களவையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவளித்துப் பேசிய நவநீத கிருஷ்ணன், சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கை சரியானது எனவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு முன்னுரிமை அளித்தவர் எனவும் தெரிவித்தார். சட்டப்பிரிவு 370 தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதால், அதை நீக்குவது சரியான நடவடிக்கையே என்றும் நவநீத கிருஷ்ணன் கூறினார்.

நவநீத கிருஷ்ணன் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details