கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடு. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்கள் பயன்பெறுவர். அடுத்து இரண்டு மூன்று நாள்களில் இது குறித்த தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்" என்றார்.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் அல்ல, வெறும் நான்கு லட்சம் கோடி ரூபாய்தான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.