நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் நடிகை ஜெயப்பிரதா, பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். 1994 இல் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலில் குதித்தார். அதன்பின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த அவர், 2010ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி நீக்கப்பட்டார்.
பாஜகவில் இணைந்த ஜெயப்பிரதா - பாஜக
டெல்லி: பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த ஜெயப்பிரதா
2009 மற்றும் 2014ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அவர் ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.