பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை போதுமானதாக உள்ளது என்றார். மேலும் மாணவிகள் சம்மந்தப்பட்டது என்பதால் கவனமாக செயல்பட வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக உள்ளது - பாரிவேந்தர் பேட்டி - பாலியல் விவகாரம்
பெரம்பலூர்: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக உள்ளதாகவும், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளேன், வெற்றிபெற்றால் விவசாயிகளின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இலவச குளிர்சாதன வேன் இயக்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் பெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டம் கொண்டுவரப்படும் என்றும் பாரிவேந்தர் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சி இளைய தலைவர் வேந்தர் ரவி உச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.