தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அபிநந்தனை வரவேற்க மேளதாளங்களோடு காத்திருக்கும் மக்கள்! - pakistan

சண்டிகர்: இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் இன்று விடுதலை செய்யவுள்ள நிலையில் அவரை வரவேற்கும் விதமாக வாகா எல்லையில் மக்கள் மேளதாளங்களுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காத்திருக்கும் பொதுமக்கள்

By

Published : Mar 1, 2019, 1:00 PM IST

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப் படை பதிலடி கொடுத்ததையடுத்து, இந்தியா பாதுகாப்புப் படையினரின் வசிப்பிடத்தைக் குண்டு வீசி அழிக்க பாகிஸ்தான் போர் விமானங்கள் முற்பட்டன. பாக். பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை முன்னரே கணித்த இந்தியா, பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையிலேயே விரட்டியடித்தன. இதில் ஆகாய மார்க்கமாக ஏவும் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து தமிழக வீரர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அப்போது, பாகிஸ்தான் விமானம் நடத்திய எதிர் தாக்குதலில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர்.

இதனால் நாடு முழுவதும் அபிநந்தனை விடுவிக்ககோரி குரல்கள் எழுந்தன. இந்திய அரசும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. ஏற்கனவே இருநாடுகளுக்கும் போர் மூளும் சூழல் ஏற்பட்டதால், சமாதானத்துக்கு வழிவகுக்கும் வகையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கான் அறிவித்தார். இதையடுத்து அபிநந்தன் இன்று வாகா எல்லையில் தாயகம் திரும்பவுள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக மக்கள் மேளதாளங்களுடனும், தேசியக் கொடிகளை ஏந்தியும் உற்சாகத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details