தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வட்டாட்சியர் உயிருடன் எரித்துக் கொலை; தெலங்கானாவில் கொடூரம்! - அப்துல்லாபுர்மெட்

ஹைதராபாத்: பெண் வட்டாட்சியரை அவரது அலுவலகத்திலேயே வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tahsildar Vijaya Reddy

By

Published : Nov 4, 2019, 9:35 PM IST

தெலங்கான மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அப்துல்லாபுர்மெட் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்துவந்தவர் விஜயா ரெட்டி. இன்று மதியம் ஒரு மணி அளவில், விஜாய ரெட்டியை பார்ப்பதற்கு நபர் ஒருவர் அவரின் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

விஜயா ரெட்டியுடன் சிறுது நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டில் ஒன்றை எடுத்து விஜயா மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டு, தானும் தீக்குளித்துக்கொண்டார்.

இதையும் வாசிங்க: பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ. 28 லட்சம் அபராதம்!

இதனிடையே, அலுவலகத்தைவிட்டு வெளியேற முயற்சித்த விஜயா, தீயின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, விஜயாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உடல் கருகி இறந்து கிடக்கும் வட்டாட்சியர் விஜயா

பலத்த காயமடைந்த அந்த குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க: சேலத்தில் 2020ஆம் ஆண்டுக்குள் ஈரடுக்கு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்' - அதிகாரிகள் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details