தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பத்ராசலம் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லூரி ஸ்ரீனிவாச ராவ். கடந்த திங்கட்கிழமை, ஆயுதங்கள் ஏந்திய 15 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் ஸ்ரீனிவாச ராவின் வீட்டிற்கே சென்று அவரை கடத்தியுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாவட்ட காவல் துறையினர் அவரை தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், எராம்பட்டு-புட்டபாடு நெடுஞ்சாலை அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அவருக்கு அருகில், மாவோயிஸ்ட்டுகள் எழுதிவைத்த கடிதம் ஒன்றும் இருந்து. அந்த கடிதத்தில், தாங்கள்தான் ஸ்ரீனிவாச ராவைக் கொன்றதாக கூறியிருந்தனர்.
தெலங்கானா எம்எல்ஏ ஸ்ரீனிவாச ராவ் இந்த மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.