கேரள மாநிலம், திருச்சூர் அடுத்த பேராமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத் ஹாசன். திரைப்பட இயக்குநரான இவர் அண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் 'விப்லவம் ஜெயக்கானுள்ளதானு' என்ற மலையாள படத்தை எடுத்துள்ளார்.
நிஷாத் இயக்கிய இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநர் நிஷாத் ஹசனுக்கும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், நிஷாத் ஹாசன் நேற்று தனது காரில் மனைவியுடன் குருவாயூர் கோயிலுக்குச் சென்றபோது, மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை மறித்துள்ளனர்.