டெல்லியை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சிங், ஏப்ரல் 18ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மருத்துவரின் தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் தன்னை மிரட்டுவதாக மருத்துவர் கூறியிருந்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலின் தந்தை மற்றும் சகோதரர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை பிரகாஷ் ஜர்வால் கைது செய்யப்பட்டார். முன்னதாக ஈடிவி பாரத்திடம் பேசிய எம்.எல்.ஏ. பிரகாஷ், “தன் மீது போலியான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது” என்றார். மேலும், “அரசியல் சதி காரணமாக என் மீது தவறான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நானும் எனது குடும்பத்தினரும் மாஃபியாக்களுக்கு எதிராக போராடிவருகிறோம்” என்றார்.
மருத்துவர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலுக்கு எதிராக சாகேத் நீதிமன்றம் பிணையில் (ஜாமின்) வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ்மாக் மூடல்: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு