நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதே சமயம், நோய் எதிர்ப்பு சக்தியால் பலர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்டதால் தற்போது குணமடைந்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு, கரோனாவிலிருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்வதற்காக பிளாஸ்மா வங்கியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். கரோனாவிருந்து குணமடைந்தோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா வழங்கி உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.