ஹாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய ’பாரஸ்ட் கம்ப்’ திரைப்படம், அமீர்கான் நடிப்பில் ’லால் சிங் சத்தா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊரடங்கிற்கு முன்பே முடிந்து விட்டாலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புகாக அமீர் கான் துருக்கி சென்றுள்ளார். மேலும், துருக்கி அதிபரின் மனைவி எமினி எட்டோகனை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ”இந்தியாவிற்கு எதிராக செயல்படும் நாட்டின் அதிபரது மனைவியை எப்படி சந்திக்கலாம்” என எதிர்ப்புகள் கிளம்பின.
'அமீர்கானை இரண்டு வாரம் அரசு விடுதியில் தனிமைப்படுத்த வேண்டும்' - சுப்பிரமணிய சுவாமி
மும்பை : துருக்கியிலிருந்து திரும்பி வந்தவுடன் அமீர்கானை இரண்டு வாரங்களுக்கு ஒரு அரசு விடுதியில் தனிமைப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அமீர்
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 விதிமுறைகளின் கீழ், துருக்கியிலிருந்து திரும்பி வந்தவுடன் அமீர்கானை இரண்டு வாரங்களுக்கு ஒரு அரசு விடுதியில் தனிமைப்படுத்த வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.