தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைப்பதை எதிர்த்து வலுவடையும் போராட்டங்கள்! - பொதுத்துறை – தனியார் கூட்டு (PPP)

கவுஹாத்தி : விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைப்பதை எதிர்த்து வலுவடையும் போராட்டங்கள்!
அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைப்பதை எதிர்த்து வலுவடையும் போராட்டங்கள்!

By

Published : Aug 21, 2020, 5:19 PM IST

நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை தனியாருடன் இணைத்து மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுத்துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் 50 ஆண்டு கால அடிப்படையிலான ஒப்பந்தம் ஒன்றை இதற்காக உருவாக்கியது. இந்த ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக இதுநாள் வரை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (ஏ.ஏ.ஐ ) விமான நிலையங்கள் தனியார் நிறுவமான அதானியின் ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் வசம் கைமாறவுள்ளது.

முதல்கட்டமாக கவுஹாத்தி, லக்னோ, மங்களூரு சர்வதேச விமான நிலையங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையத்தில் (எல்ஜிபிஐ) இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஏ.ஐ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கூட்டமைப்பினர், "விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் த்திய அரசின் நடவடிக்கையை ஊழியர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். கரோனா நெருக்கடிக்கு மத்தியில் தங்களது உயிர்களை பணயம் வைத்து பொதுத்துறை நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இந்த அரசோ எங்களது உழைப்பை பயன்படுத்திக்கொண்டு, இப்போது அநீதி இழைக்கப் பார்க்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதாகும், ஆனால் தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்ட மட்டுமே இங்கு வந்துள்ளன. இதனை பயணிகள் ஏற்றால் இதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே மக்கள் தங்கள் விமான பயணத்திற்கு பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த தனியார்மயமாக்கல் ஒரு அவர்கள் மீது சுமையை வைக்கும்" என கூறினர்.

இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத்தை மீறி இந்த ஏலத்திற்கான பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details