17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் வெறும் 2.4 விழுக்காடு வாக்குகளை பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
'என் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கிறது' - பிரகாஷ் ராஜ் ட்வீட் - ls
பெங்களூரு: பெங்களூரு மத்திய தொகுதியில் தோல்வி அடைந்தது, எனது கன்னத்தில் அறைந்ததை போல இருக்கிறது என நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்த அவர், "மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பது, என் கன்னத்தில் அறைந்ததை போல் இருக்கிறது. இந்த முடிவினால் நான் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாவேன். ஆனால் இது மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் எனது கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்காது. எனது அரசியல் முயற்சிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.