தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணத்திற்கு மறுப்பு : சினிமா பாணியில் கடத்தப்பட்ட காதலி - சினிமா பாணியில் கடத்தப்பட்ட காதலி

பெங்களூரு : கர்நாடகாவில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் காதலியை காதலன் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா
கர்நாடகா

By

Published : Aug 14, 2020, 6:20 PM IST

கர்நாடக மாநிலம், கிளாரிபேட்டே பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தேவாங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ள அப்பெண் முடிவெடுத்துள்ளார்.

இதற்கிடையே, தனது நண்பரின் காரைப் பயன்படுத்தி அப்பெண்ணை சிவா கடத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எம்பி சாலையில் இக்கடத்தம் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தக் கடத்தல் சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவான நிலையில், அக்காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவா

இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா பாணியில் கடத்தப்பட்ட காதலி

இதையும் படிங்க: பிரபல பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடம்

ABOUT THE AUTHOR

...view details