காஷ்மீர் சபர்வன மலை பகுதியில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலுக்கு உலகம் முழுவதுதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
காஷ்மீர் பண்டிதர்களால் ஹேராத் என்றழைக்கப்படும் மகா சிவராத்திரி இன்று இரவு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சிவனை வழிபட இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அங்கு செல்கின்றனர். வேண்டுதல் உண்மையாக இருந்தால் அதனை அப்படியே சிவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் தூங்காமல் முழிக்கும் பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள அப்பகுதி மீண்டு வரவும் பக்தர்கள் வேண்டிவருகின்றனர். இதுகுறித்து ரேனுகா குப்தா என்ற பக்தர், "நான் குடும்பத்தோடு இங்கு வந்துள்ளேன். அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளேன்.
சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு காஷ்மீர் கடினமான சூழலை சந்தித்துவருகிறது. அமைதியும் மதநல்லிணக்கமும் பரவிட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளேன்" என்றார்.
மன்னர் சண்டிமானால் 1368ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலை கோபாதித்யா மறு சீரமைப்பு செய்தார். பின்னர், நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த இக்கோயிலை இஸ்லாமிய மன்னர் சயின் உல் அப்தின் மீண்டும் மறு சீரமைப்பு செய்தார்.
மசூதி, கோயில், குருத்வாரா ஆகியவை அமைந்துள்ள ஹரிபார்பாத் நகரை நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்தை போதிக்கும் கோயில் என இதனை பக்தர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர்.
மத நல்லிணக்கத்தை போதிக்கும் சிவன் கோயில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு படை கோயில் முன்பு குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை காட்டி கோயிலுக்குள் கார், மொபைல் போன்கள், கேமரா ஆகியவை அனுமதிக்கப்படுவதில்லை.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி: உலகம் முழுவதுமிருந்து சிவன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்