பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது.
மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவிற்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். தேசத்தின் சகோதரத்துவம், இரக்கம், பண்பாட்டை பறைசாற்றுவிதமாக இன்று இந்தியாவிற்கு மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறிய அவர், அதற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் இந்த மசோதா பல ஆண்டுகளாக துன்பத்தில் வாடிய மக்களின் துயரத்தை போக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் - ரயில்கள் ரத்து, இணைய சேவை முடக்கம்