தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்' - பாஜக

டெல்லி : காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிசங்கர் அய்யர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

A Gandhi should lead Congress
A Gandhi should lead Congress

By

Published : Sep 4, 2020, 12:14 PM IST

கேள்வி : மூத்தத் தலைவர்கள் vs இளம் தலைவர்கள் என்ற போட்டியும், தலைமை குறித்த சிக்கலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் என்னதான் பிரச்னை?

அது தலைமை குறித்த பிரச்னை அல்ல, தற்செயலானது. 23 மூத்தத் தலைவர்கள்கூட (சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள்) காங்கிரஸின் பிரச்னைகளுக்கான அடிப்படைத் தீர்வு, தலைமை மாற்றத்தில் உள்ளது என்று பரிந்துரைக்கவில்லை.

இருப்பினும், தலைமையில்தான் உண்மையில் பிரச்னை உள்ளது என்று அவர்கள் கருதினால், யார் வேண்டுமானலும் தலைமைக்கான தேர்தல் நடைபெறும்போது போட்டியிடலாம். முன்னதாக, நடைபெற்றத் தேர்தலில் சோனியா காந்தி 9,400 வாக்குகளுக்கு எதிராக 94 வாக்குகளைப் பெற்ற ஜிதேந்திர பிரசாதாவின் தலைவிதியை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

பிரச்னை வேறு இடத்தில் உள்ளது. விடுதலைப் போராட்டத்தின் மூலமாக, சுதந்திரத்திற்குப் பின் முதல் 20 ஆண்டுகளில் காங்கிரசுடன் இணைந்து சமூகக் குழுக்கள் பயணித்தன. ஆனால், அந்தச் சமூகக் குழுக்கள் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலிருந்து காங்கிரஸிலிருந்து பிரிந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை சுயமாக அடைய முயன்றன.

குறிப்பாக, 1990ஆம் ஆண்டின் மண்டல் கமிஷனுக்குப் பின், பல பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒரு தனி இயக்கத்தை உருவாக்கிக்கொண்டனர். இதன் மூலம் அழர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் யாதவர்கள் ஆகியோர் மற்ற பிரிவினரைவிட முன்னேறியிருப்பதையும், பட்டியிலினப் பிரிவினர்களில் ஜாதவர்கள் மற்ற பிரிவினரைவிட முன்னேறியிருப்பதையும் கண்டுபிடித்தனர். 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் குழப்பத்தால் பல இஸ்லாமியர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறினர்.

தலைமையை ஒரு பிரச்னையாக பார்க்கக் கூடாது. தற்போது உள்ள பிரச்னைகள் மிகவும் ஆழமானவை. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற சமூகக் குழுக்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதன் மூலமே பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஆனால், தற்போது குறிப்பிட்ட பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் அவ்வாறே தொடர வேண்டும். ஆனால் அவை கேரளாவைப் போல தேர்தல்களுக்கெல்லாம் முன்னரே காங்கிரஸுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் அடையாளங்களை அவர்கள் வைத்துக்கொள்ள இது உதவும். தங்களின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூடுதல் பதவிகளும் அவர்களுக்கு கிடைக்கும்.

கேள்வி : ஆனால் நீங்கள் ஏன் கூட்டணியை விரும்புகிறீர்கள்? இங்கிருக்கும் பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் பணியாற்ற விரும்புமா?

வலுவான கூட்டணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும். பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸூடன் பணியாற்ற வேண்டும் என்றே நான் பரிந்துரைக்கிறேன். நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும்.

நீங்கள் எங்கள் தலைமைக்குக் கீழ் பணியாற்ற வேண்டும் என்று நாம் கூறத் தொடங்கினால், அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள். கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடம் ஒரு கட்சிதான் கூட்டணியை வழிநடத்தும் என்ற பொதுவான புரிதல் உங்களுக்கு இருந்தால், தலைமை குறித்த விவாதத்தை ஒதுக்கி வைத்து விடலாம். கூட்டணி நம்மை வழிநடத்தும். நான் என்ன சொல்கிறேன் என்றால், பிரதமர் யார் என்ற கேள்வியை இப்போது கேட்காதீர்கள்.

தேர்தலுக்குப் பின் அந்த கேள்வி எழுந்தால் சிக்கல் இல்லை. ஆனால், பிரதமர் யார் என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் இல்லை. கேரளாவைப் போல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை உருவாக்கினால் மட்டுமே 2024ஆம் ஆண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியும்.

கேள்வி: தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் மக்களவையில் 10 விழுக்காடு சீட்டுகளை வென்று எதிர்க்கட்சியாகக்கூட முடியவில்லை. இது பற்றி உங்கள் கருத்து?

கண்டிப்பாக இது ஒரு சவாலான விஷயம்தான். இதற்கு முன்னரும் நாங்கள் பின்னடைவை சந்தித்துள்ளோம். தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டிற்கு பின் நாங்கள் ஆட்சியில் இல்லை, குறைந்தது அடுத்த 60 ஆண்டுகளுக்கு எங்களால் அங்கு ஆட்சிக்கு வர இயலாது. ஆனால், காங்கிரஸை ஆதரிக்கத் தயாராக இல்லாத கிராமங்கள் தமிழ்நாட்டில் இல்லை.

இதுதான் திமுக, அதிமுக கட்சிகளுடன் எங்களைப் பயணிக்க வைத்தது. 1991ஆம் ஆண்டு நான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து 39 மக்களவை இடங்களிலும் எங்கள் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. நாடாளுமன்ற அரசியலில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளன. நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, சமூகக் குழுக்களை நம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்

கேள்வி: நீங்கள் கூறுவது நீண்ட காலத் தீர்வு. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை அல்லவா?

கட்சிக்குள் எழும் பிரச்னைகளுக்கு தற்போதுள்ள தலைமையால் அதிக நேரம் ஒதுக்க முடியுமானால், அது நன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றை தேர்ந்தெடுக்க ராகுல் காந்தி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். கட்சித் தலைமையிலிருந்து விலகுவது குறித்து அவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக கூறிவந்தார். மேலும் தனது தாயையும் (சோனியா காந்தி) சகோதரியையும் (பிரியங்கா காந்தி) தலைமைப் பதவிக்கு வரக்கூடாது என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் யாரும் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்க விரும்பவில்லை. பாஜக, காங்கிரஸ் இல்லாத தேசம் என்பதை பரப்புரை செய்கின்றனர், காந்தி இல்லாத காங்கிரஸ் உருவானால் மட்டுமே காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகும். நமது நேரத்தை தலைமை குறித்து விவாதித்து வீணடிக்கத் தேவையில்லை.

கேள்வி: காந்தி குடும்பத்தையும் காங்கிரஸை பிரிக்க முடியாது என்று கூற வருகிறீர்களா?

மூன்று காந்திகளில் (சோனியா, ராகுல், பிரியங்கா) ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ராகுல் காந்தி விரும்பினால் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். ஆனால், விருப்பமில்லாத ஒருவரை எவ்வாறு தலைமைப் பொறுப்பேற்க வலியுறுத்த முடியும்?

இல்லையென்றால், பிரியங்க காந்தி தலைமைப் பொறுப்பேற்கலாம், அல்லது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் சோனியா காந்தி தலைமையைத் தொடரலாம். பாஜகவையும் காவியையும் வீழ்த்த நாம் ஒன்றியணைய வேண்டும்.

இதற்கு நாம் காந்தி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மக்களவையில் நாம் 52 இடங்களை மட்டுமே பெற்றுள்ளோம். பாஜகவுக்கு அல்லாத வாக்குகள் பிரிந்திருப்பதே இதற்குக் காரணம். 2019ஆம் ஆண்டு பாஜகவுக்கு அல்லதா வாக்குகள் 63 விழுக்காடாக இருந்தது. ஆனால், அவை சிதறியிருந்தன. அவற்றை நாம் ஒன்றிணைக்க வேண்டும். அதை காந்தி குடும்பத்தினரால் மட்டுமே செய்ய முடியும்.

காந்தி குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக காங்கிரஸை வழிநடத்தியுள்ளனர். கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்றால், இதுவரை கட்சியின் உயர் பதவியை வகிக்காத ஒரு புதியவரைக் கொண்டுவர இந்த நேரத்தில் முயற்சிக்க வேண்டும்.

கேள்வி: அப்படியென்றால் பிரியங்கா காந்தி தலைமைக்கு வர வேண்டும் என்பது உங்கள் விருப்பமா?

இல்லை. எனது விருப்பம் காந்திதான். அது அவரது குடும்பத்தில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கேள்வி: 2019ஆம் ஆண்டு முதல் காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. அது ஒரு நல்ல தேர்வாக இருக்குமா?

பிரபல இந்தி திரைப்பட நடிகை மதுபாலா என்னுடன் வாழ வேண்டும் என்று எனது இளமைப் பருவத்தில் நான் ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸ் தலைமையில் இருக்க வேண்டும் என்பதும் இதுபோன்ற ஒன்றுதான். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்கும்வரை வேறு யாரும் அந்த நிலையை எட்ட முடியாது.

கேள்வி: உள்கட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்து உங்கள் கருத்து?

முன்னாள் (மறைந்த) பிரதமர் ராஜிவ் காந்தி 1990களில் இதைதான் சொல்லிக் கொண்டிருந்தார், 2007ஆம் ஆண்டு முதல் ராகுலும் இதைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்திய இளைஞர் காங்கிரஸிலும் இந்திய தேசிய மாணவர் அமைப்பிலும் உள்கட்சித் தேர்தல்களை கவனத்தில் கொண்ட சில விஷயங்களை செய்ய முயன்றார். சில சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் அது பெரிய சிக்கல் இல்லை. அவை புதுமையான யோசனைகள். 23 மூத்தத் தலைவர்கள் முன்மொழிந்த சில திட்டங்களை கட்சி ஏற்றுக் கொள்ளும், ஏன் அனைத்தையும்கூட ஏற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: 'கரோனா வைரஸ் எதிர்பாராதது; நாட்டின் பின்னடைவு'- பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details