தீபாவளி நேற்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், விதியை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதற்கிடையே, பிகார் பக்ரிதயால் காவல் நிலையத்திற்குட்பட்ட இரண்டு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
தீபாவளியன்று நேர்ந்த விபரீதம்! - பீகாரில் தீ விபத்து
பாட்னா: பிகாரில் தீபாவளியன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளன.
Fire
அஜ்கர்வாவில் உள்ள ஹரேந்திர பண்டிட் என்பவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், கிராம மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல், ஹர்சித்தி கிராமத்தில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக ஒரு வீட்டில் தீப்பிடித்து முற்றிலுமாக சேதமடைந்தது.
இதற்கிடையே, ராம்பூரில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்தது. ஆனால், கிராம மக்கள் சாதுர்யமாக செயல்பட்டு அத்தீயை அணைத்தனர்.