ஹைதராபாத்: உங்களுக்கு எப்போதாவது ஏதாவது செய்ய விருப்பம் இருந்தும், உங்களுக்கு தேவையான ஆற்றல் இல்லாததால், தள்ளிப்போட்டு முடிக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு அதற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே, உங்களது பணியை வெற்றிகரமாகச் செய்ய உடனடி ஊக்கத்தையும் சக்தியையும் தரும் சில உணவுகள் குறித்து இங்கே காணலாம்.
வாழைப்பழம்
விளையாட்டு போட்டியின் போது பல வீரர்கள், வாழைப்பழங்கள் சாப்பிடுவதை பார்த்திருக்கலாம். அங்குதான் அவர்கள் ஆற்றலைப் பெறுகிறார்கள். வாழைப்பழத்தில் ஃபைபர், வைட்டமின் பி 6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகின்றன. சர்க்கரையின் இயற்கையான மூலமாக வாழைப்பழங்கள் இருப்பதால், இது சிறந்த ஆற்றல் அதிகரிப்புகளில் ஒன்றாகும்.
ஆப்பிள்
தினந்தோறும் ஒரு ஆப்பிள் உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிக நல்லது. இதனை மருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பதை பார்த்திருப்போம். ஆப்பிள் சாப்பிட்டால் ஆற்றல் தூண்டப்படும். மேலும், ஆப்பிளில் கார்ப்ஸ், ஃபைபர் மற்றும் இயற்கை சர்க்கரை ஆகியவை நிறைந்துள்ளன. அவை படிப்படியாக மற்றும் நீடித்த ஆற்றல் வெளியீட்டை வழங்கும்.
தண்ணீர்
மனித உடலுக்கு ஆக்ஸிஜன் இருப்பது போலவே போதிய அளவு தண்ணீரும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் உடலை மெதுவாக்கும். எனவே, தண்ணீரை உட்கொள்வது உங்களுக்கு ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும். உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சோர்வை அண்ட விடாது.
காஃபி
காலையில் காஃபி அருந்துவதால், உங்களுக்குள் ஆற்றல் தூண்டப்படுகிறது. மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ஒரு பணியை செய்வதற்கான ஆற்றலை வழங்குகிறது. எனி்னும் காஃபி அதிகமாக பருகினால் உங்களின் தூக்கம் கெடும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி இயற்கையான சர்க்கரை, கார்ப்ஸ் மற்றும் ஃபைபர் ஆகியவற்றை வழங்குகிறது. இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், அதன் ஆன்டி-ஆக்ஸிஜனேற்ற தன்மை சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது, ஆற்றலைத் தருகிறது. இது சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பழங்களில் ஒன்றாகும்.
பாப்கார்ன்
பாப்கார்னில், குறைந்த கலோரி ஃபைபர் மற்றும் கார்ப்ஸ் அதிகம் உள்ளது. இவை இரண்டும் ஆற்றல் அளவை அதிகரிக்க காரணமாகின்றன. கூடுதலாக, அதன் கலோரி உள்ளடக்கம் உருளைக்கிழங்கை விட குறைவாக உள்ளது.
கறுப்பு சாக்லேட்
கறுப்பு சாக்லேட் (டார்க் சாக்லேட்) அனைத்து சாக்லேட் பிரியர்களுக்கும், ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும். இது வழக்கமான பால் சாக்லேட்டை விட குறைந்த அளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது. ஆனால் அதிக அளவு கோகோ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும், எனவே ஆற்றலை அதிகரிக்கும். சோர்வுக்கு எதிராக போராடுவதற்கும் மனநிலையை இலகுவாக்குவதற்கும் இது உதவியாக இருக்கும்.
நட்ஸ்
பாதாம், முந்திரி, நிலக்கடலை, வாதுமை கொட்டை போன்றவை கார்ப்ஸ், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். அவை நீடித்த ஆற்றலை வழங்க உதவுகின்றன. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களிலும் நிறைந்துள்ளன, இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.
பச்சை இலை காய்கறிகள்
கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளன. அவை ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன, இதனால் மீண்டும் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. இவை தவிர, ஆரஞ்சு, பயறு, முட்டை, தயிர், ஓட்ஸ், பீன் மற்றும் கிரீன் டீ ஆகியவையும் நீங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை கார்ப்ஸ், ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சிறந்த ஆற்றல்மிக்க உணவு மூலங்களாகும். இதையும் படிங்க: பெருந்தொற்று நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா? டாக்டர் பதில்!