கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான பேரிடர் காலத்தில் கூட குழந்தைகள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் 898 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் வெளியிடப்பட்ட அவசர எண்ணான 1098 மூலம் 898 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அவசர எண் மூலம் தெரிவிக்கப்பட்ட 18,200 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெரும்பான்மையான புகார்கள் வந்துள்ளது.