தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேலும் 85 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா!

நாட்டின் பல்வேறு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்களில் மேலும் 85 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதன் மூலம் பாதிக்கப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது.

85-more-bsf-personnel-test-covid-19-positive-total-154-infected
85-more-bsf-personnel-test-covid-19-positive-total-154-infected

By

Published : May 7, 2020, 11:45 AM IST

நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. நேற்று முன் தினம் முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அவர்களில் 67 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இந்நிலையில், மேலும் 85 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. டெல்லி ஜாமியா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 60 பேருக்கும், கொல்கத்தாவில் ஆறு பேருக்கும், திரிபுராவில் 19 பேருக்கும் இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. இதனால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவிட்-19: மோடிக்கு மக்கள் ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details