தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்! - 8 people swept away in Telangana

ஹைதராபாத்: அலிகார் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

yd
jyd

By

Published : Oct 15, 2020, 5:24 PM IST

தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாமல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, ஹைதராபாத் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தபடி காட்சியளித்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹைதராபாத் நகரமே இருளில் மிதந்தது.

இந்த கனமழைக்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மழை குறைந்ததால் பல இடங்களில் நீர் வடியத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அலிகார் பகுதியில் உள்ள மைலர்தேவ்பள்ளி கிராமக் குளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அபாயகரமான பகுதியாக அலிகார் திகழ்வதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

வெள்ளப்பாதிப்பை சமாளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details