தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல்கர் கும்பல் வன்முறை : அதிரடி காட்டும் சிஐடி - பல்கர் கும்பல் வன்முறை

மும்பை : பல்கர் கும்பல் வன்முறை தொடர்பாக மேலும் எட்டு பேரை சிஐடி கைது செய்துள்ளது.

சிஐடி
சிஐடி

By

Published : Oct 22, 2020, 6:14 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த இரண்டு மதகுருக்கள் உள்பட மூன்று நபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலை செய்தனர். இந்தப் படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, குற்றப்பரிவு - குற்றப் புலனாய்வுத்துறைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி மேலும் எட்டு பேரை சிஐடி அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம், 11 சிறார்கள் உள்பட 186 பேரை சிஐடி கைது செய்துள்ளது. நேற்று (அக்.22), மட்டும் 24 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "சம்பவம் நடைபெற்ற இடத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இருந்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்றை பொருட்படுத்தாமல் அங்கு குவிந்திருந்த அவர்கள், மூவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை. சம்பவத்தை சிலர் காணொலிப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட அனைவரிடமும் ஆயுதம் இருந்துள்ளது" என்றார்.

முன்னதாக, பல்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்திலிருந்து 35 காவல் துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட்-19 கால பாதுகாப்பு: உலகளவிலான பட்டியலில் 3ஆம் இடம்பிடித்த டெல்லி விமானநிலையம்

ABOUT THE AUTHOR

...view details