தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமான சேவை தொடக்கம்: 8 பயணிகளுக்கு கரோனா

டெல்லி: விமான சேவைகள் தொடங்கியதிலிருந்து மே 27ஆம் தேதிவரை மூன்று நாள்களில் மட்டும் மொத்தம் எட்டு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

flights
flights

By

Published : May 29, 2020, 12:11 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்றின் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த பயணிகள் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதனையடுத்து நான்காம் கட்ட ஊரடங்கு மே 18ஆம் தேதி தொடங்கியது. முதல் மூன்று கட்ட ஊரடங்கைக் காட்டிலும் இந்த முறை தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. விமான நிலையங்களில் கடும் சோதனைக்குப் பிறகே பயணிகள் பயணம் செய்கின்றனர். விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னரும்தான் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், மே25 ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதிவரை மூன்று நாள்களில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி திங்களன்று சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு பயணம் செய்த பயணி ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநாளில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அகமதாபாத்திலிருந்து கவுகாத்திக்கு பயணித்த இரண்டு பயணிகளுக்கு தொற்று இருப்புது கண்டறிப்பட்டது.

அதேபோல் மே 27 புதன்கிழமை அன்று இண்டிகோவின் 7இ 7214 விமானத்தில் பெங்களூரிலிருந்து மதுரைக்கு பயணம் செய்ய வந்திருந்த பயணிக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுபோன்று விமானச் சேவைகள் தொடங்கியதிலிருந்து மே 27 வரை மூன்று நாள்களில் மட்டும் மொத்தம் எட்டு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:இந்தியா வந்த 269 பேர்... விமான நிலைய அலுவலர்கள், பயணிகளிடையே வாக்குவாதம்...!

ABOUT THE AUTHOR

...view details