கரோனா அச்சம் காரணமாக நாடு முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கலால் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட இடங்களில் கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஒரு மறைவான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கலால் அலுவலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 200 லிட்டர் சாராய மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு 80 லிட்டர் சாராய மூலப்பொருளை பறிமுதல் செய்த அலுவலர்கள், அங்கிருந்த மூன்று பேரை கைது செய்தனர்.