தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

18 ஆண்டுகள் சிறை வாசத்துக்கு பின் நாடு திரும்பிய பெண்மணி! - அவுரங்காபாத் காவல் துறையினர்

மும்பை: 18 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையிலிருந்த 65 வயதான பெண்மணி தற்போது நாடு திரும்பியுள்ளார்.

18ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறை: நாடு திரும்பிய 65 வயது பெண்மணி!
18ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறை: நாடு திரும்பிய 65 வயது பெண்மணி!

By

Published : Jan 27, 2021, 12:54 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் ஹசினா பேகம். தற்போது 65 வயதாகும் இவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரின் உறவினர்களை சந்திக்க பாகிஸ்தான் சென்றிருந்தார்.

அப்போது அங்கு பேகத்தின் பாஸ்போர்ட் தொலைந்து போனது. இதனால், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். தாயகம் திரும்ப முடியாத ஏக்கத்தில் இருந்த பேகத்திற்கு அவுரங்காபாத் காவல் துறையினர் உதவி செய்தனர். இதனையடுத்து அந்தப் பெண் கடந்த வாரம் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, நாடு திரும்பினார். அவரை உறவினர்கள், காவல் துறையினர் வரவேற்றனர்.

18ஆண்டுகள் பாகிஸ்தானில் சிறை: நாடு திரும்பிய 65 வயது பெண்மணி!

இது குறித்து ஹசினா பேகம் கூறுகையில், “அவுரங்காபாத் காவல்துறையினர் உதவியதற்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்

ABOUT THE AUTHOR

...view details