உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் இந்தியாவை விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 83 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதித்தும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் டெங்கு பரவிவருகிறது. இது குறித்து தென் டெல்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கூறுகையில், “அக்டோபர் 31ஆம் தேதிவரை டெல்லியில் 612 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.