டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது. இதை தொடர்ந்து, அந்த தடையை நீக்குமாறு அந்நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை நீக்க மறுப்பு தெரிவித்ததோடு, அடுத்தகட்ட விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் - tik tok
டெல்லி: இந்தியர்களின் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக் டாக் நிறுவனம்
இந்நிலையில் டிக் டாக் ஆப் பதிவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள டிக் டாக் நிறுவனம், ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தியர்களின் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.