பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கர்தார்ப்பூரில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்,பாகிஸ்தானில் உள்ளதர்பார் சாஹிப் என்ற குருத்வாரா (புனித தலம்) அமைக்கப்பட்டது.
குருநானக் பிறந்தநாள்; பாகிஸ்தான் சென்ற 500 சீக்கியர்கள்! - kartharpur
டெல்லி: குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 500 சீக்கியர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.
500 Sikhs cross Pak to attend Guru Nanak's birth celebrations
இந்த புனித தலத்திற்கு உலக நாடுகளில் வாழும் சீக்கியர்கள் வந்துபார்த்து செல்வதுண்டு. குறிப்பாக இந்தியாவிலிருந்துதான் அதிகமான சீக்கியர்கள் அங்கு சென்று வழிபட்டுவருகின்றனர்.
குருநானக்கின் 550ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலே விழா களைகட்ட தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியாவிலிருந்து 500 சீக்கியர்கள் சாலைமார்க்கமாக பாகிஸ்தானின் கர்தார்பூருக்குச் சென்றுள்ளனர்.