1947-1955 காலகட்டத்தில் ஒரு ஆண்டிற்கு குறைந்தது 40 வங்கிகள் திவாலானதாக கண்டறியப்பட்டது. மேலும், தனியார் வங்கிகள் - வணிக நிறுவனங்களுக்கு அளிப்பதைப் போன்று விவசாயத்திற்கும், தொழில்சாலைகளுக்கும் கடன் வழங்க முன்வராதது தெரியவந்தது.
இதன் காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, 1969 ஜனவரி 29ஆம் தேதி, வங்கிகள் ஆணையத்தை அமைத்து
1) வங்கிகளின் செலாவணி,
2) வங்கிகளைப் பாதிக்கும் சட்டங்கள்
3) இந்தியாவில் உருவான வங்கிகள்
4) வங்கி நடைமுறைகள்
5) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இதைத் தொடர்ந்து,1969 ஜூலை 19ஆம் தேதி, ரூ.50 கோடிக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் 14 வணிக வங்கிகளை தேசிய மயமாக்க இந்திரா காந்தி அரசு உத்தரவு பிறப்பித்தது. தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல்
- பரோடா வங்கி
- இந்தியா வங்கி
- மகாராஷ்டிரா வங்கி
- பாரத சென்ட்ரல் வங்கி
- கனரா வங்கி
- தேனா வங்கி
- இந்தியன் வங்கி
- அலகாபாத் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா
- சிண்டிகேட் வங்கி
- யூகோ வங்கி
- யூனியன் வங்கி
முன்னாள் நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் இந்த முடிவை நிராகரித்தபோதிலும், அதனை இந்திரா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை.
இதேபோன்று, 1980ஆம் ஆண்டு, விஜயா வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி, நியூ பேங்க் ஆஃப் இந்தியா, கோவாப்ரேட் வங்கி ஆகிய ஆறு வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.