தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் 50 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் வேட்டையாடப்பட்டனர்! - 2019ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் 160 பயங்கரவாதிகள் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஜெய்ஷ்-இ-முகமது, லாஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்பு அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

50 terrorists killed in J-K in 2020; 18 during lockdown
ஜம்மு-காஷ்மீரில் 50 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் வேட்டையாடப்பட்டனர்!

By

Published : Apr 24, 2020, 4:19 PM IST

இது தொடர்பாக மூத்த பாதுகாப்பு படை அலுவலர் கூறுகையில், “இந்த ஆண்டில் இதுவரை 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள கடந்த 30 நாள்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது, லாஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் உயர் தளபதிகளும் அடங்குவர்.

ஜனவரி 15ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் உயர்மட்ட தளபதி ஹாரூன் வாணி கொல்லப்பட்டார். ஜனவரி 23ஆம் தேதி, புல்வாமா மாவட்டத்தின் க்ரூ பகுதியில் அபு சைபுல்லா காசிம் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். ஜனவரி 25ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் அல்ட்ராக்களுக்கும் இடையிலான மோதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் காஷ்மீர் தலைவர் காரி யாசிர் உள்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மார்ச் 15ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் டயல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் லாஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முசாபர் அகமது பட் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 9ஆம் தேதி, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உயர்மட்ட தளபதி சஜாத் நவாப் தார் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டில் பயங்கரவாதிகளால் 13 பாதுகாப்பு வீரர்கள், மூன்று சிறப்பு காவல்படை அலுவலர்கள், ஒரு காவல்துறையைச் சேர்ந்தவர் என மொத்தமாக பதினேழு பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ”என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் 50 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் வேட்டையாடப்பட்டனர்!

கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் 160 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாத செயல்பாடுகளோடு தொடர்பில் இருந்த 102 பேர் கைது செய்யப்பட்டனர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :கரோனா - அரசு மருத்துவமனைக்கு சீல்

ABOUT THE AUTHOR

...view details